தூத்துக்குடியில் அதிர்ச்சி...! கையில் அரிவாளுடன் கடைவீதியில் ரகளையில் ஈடுபட்ட இருவர் அதிரடி கைது...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மதுபோதையில் கையில் அரிவாளுடன் கடைவீதியில் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்திய இருவரை காவலர்கள் மடக்கிப் பிடித்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கயத்தாறு அருகே உள்ள காப்புலிங்கம்பட்டி கீழத்தெருவைச் சேர்ந்த கருப்பசாமியின் மகன் சமுத்திரம் (40). தனியார் பயண நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டியின் மகன் மகேஷ் (33). கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.நண்பர்களான சமுத்திரமும் மகேஷும் நேற்று முன்தினம் மாலை மதுபோதையில் காப்புலிங்கம்பட்டி கடைவீதிக்கு சென்றுள்ளனர். அப்போது இருவரும் கைகளில் அரிவாளை வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கையில் அரிவாளுடன் இருவர் அட்டகாசம் செய்ததால் கடைவீதியில் இருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். பலரும் அங்கிருந்து பாதுகாப்பாக விலகி ஓடியதால், அந்தப் பகுதியில் திடீர் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக கயத்தாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் காவல் ஆய்வாளர் சூரியா, உதவி ஆய்வாளர் காந்திராஜன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.அப்போது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமுத்திரம் மற்றும் மகேஷை காவலர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் இருந்த அரிவாள்களையும் பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள், சமுத்திரம் மற்றும் மகேஷை கைது செய்து கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி உத்தரவின்பேரில் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கடைவீதியில் அரிவாளுடன் இருவர் அட்டகாசம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thoothukudi Two people involved riot shopping street sickle their hands arrested crackdown


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->