குடிபோதையில் வெறிச்செயல்...! மதுபாட்டிலால் சரமாரியாகத் தாக்கி கொத்தனாரைக் கொன்ற நண்பர்கள்...! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி அருகே நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட திடீர் தகராறு கொலை சம்பவமாக மாறியது. மதுபாட்டிலால் தலையில் சரமாரியாக தாக்கப்பட்ட கொத்தனார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை கே.சுப்பிரமணியபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தியின் மகன் கணேஷ்குமார் (28). கொத்தனாராக வேலை செய்து வந்தார்.

கடந்த 14-ந்தேதி இரவு கணேஷ்குமார் தனது நண்பர்கள் 3 பேருடன் புதுக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியின் பின்புறம் அமர்ந்து மது அருந்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.நேரம் செல்லச் செல்ல வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து கணேஷ்குமாரை மதுபாட்டிலால் தலையில் சரமாரியாக தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.தாக்குதலில் படுகாயமடைந்த கணேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமானதால் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கணேஷ்குமார், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை காவல் நிலைய காவலர்கள் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரை காவலர்கள் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும், சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவான மற்றொரு நபரையும் காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு கொலை சம்பவத்தில் முடிந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drunk and crazy Friends who attacked and killed bricklayer bottle alcohol What happened


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->