திருவாரூர்: போலீசை வெட்டிய ரவுடி மீது துப்பாக்கி சூடு!
Thiruvarur Police Gun Fire Rowdy
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் காவலரை வெட்டி விட்டு தப்பி ஓடிய ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.
பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மனோ நிர்மல்ராஜை பிடிக்க முயன்ற போது, காவலர் விக்னேஷை வெட்டிவிட்டு தப்பி ஓடி உள்ளார்.
இதனை அடுத்து ரவுடி மீது காவல் ஆய்வாளர் சந்தோஷ் குமார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ரவுடிக்கு தற்போது திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை ஆவடி அருகே நகைக்கடையில் நுழைந்து உரிமையாளரை தாக்கி விட்டு, 50 சவரன் நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று இரவு ஒன்பது முப்பது மணி அளவில் நகை கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் இருவர், கத்தியை காட்டி மிரட்டியதாக நகைக்கடை உரிமையாளர் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நகையை தர மறுத்த ரமேஷை கட்டிப்போட்ட மர்ம நபர்கள், அவரை கடுமையாக தாக்கி விட்டு 50 சவரன் நகைகளை திருடி சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மர்ம நபர்கள் தாக்கியதில் காயமடைந்த ரமேஷ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில் தொடர் கொலை குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கருப்பையா மற்றும் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த வீரபாண்டி ஆகியோர் இருவர் மீது, காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில், குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Thiruvarur Police Gun Fire Rowdy