வாட்சாப்பில் இந்த வேலை எல்லாம் நடக்குதா?! மாணவர்களின் வாழ்வை சூரையாடிய வடக்கன்ஸ்.!   - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் நசரத்பேட்டையில் வாட்ஸ்அப் குழு மூலமாக கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் கைதுசெயது இருக்கின்றனர். 

நசரத்பேட்டை பகுதியில் வாட்ஸ்அப் குழு மூலமாக கஞ்சா விற்பனை நடத்தபட்டதாக காவல்துறையினரூக்கு ரகசிய தகவல் கிடைத்து இருக்கின்றது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாட்ஸ் அப் குழு மூலமாக கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்த ஜஸ்டின் ஹேமகுமர்(21), சரண்ராஜ்(23), பிரபாகரன்(21) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த விசாரணையில், வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி கல்லூரி மாணவர்களுக்கு வாட்ஸ்அப் குழு மூலமாக விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அத்துடன், அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruvallur students took divert of north indians


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal