தென்காசி மக்களுக்கு நல்ல செய்தி கூறிய., மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்ட காவல்துறையின் நடவடிக்கையால் இந்த ஆண்டு சாலை விபத்து மரணங்கள் குறைந்துள்ளது என்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் இ.கா.ப அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

"தென்காசி மாவட்ட காவல்துறையின் நடவடிக்கையால் இந்த ஆண்டு கொலை வழக்கு உட்பட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் சாலை விபத்துக்கள், மற்றும் சாலை விபத்து மரணங்கள் குறைந்துள்ளது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் இ.கா.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

குண்டர் தடுப்பு சட்டம்:

தென்காசி மாவட்டத்தில் 31.12.2020 வரை பாலியல் குற்றவாளி 1 நபர், திருட்டு வழக்கில் 4 நபர்கள் உட்பட 10 நபர்கள் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை வழக்குகள்:

31.12.2020 வரை 31 கொலை வழக்குகள் பதிவாகி அனைத்து வழக்குகளிலும் 77 எதிரிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள்:

கடந்த ஆண்டு கூட்டு கொள்ளை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, போன்ற வழக்குகளில் பதிவான 220 வழக்குகளில் 130 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, எதிரிகளை கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 1,00,61,890- ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதை பொருள் வழக்குகள்:

2020ம் ஆண்டு போதை தடுப்பு குற்றத்தில் 129 வழக்குகள் ரூபாய் 94430-(தொன்று நாலாயிரத்து  நானுற்றி முப்பத்து) மதிப்புள்ள 37.780 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

புகையிலை பொருட்கள்:

2020ம் ஆண்டு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவை குறித்து 789 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 39,87,583 மதிப்புள்ள 9075 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது.

மணல்திருட்டு:

2020ம் ஆண்டு சட்ட விரோதமாக ஆற்றுமணல் திருட்டு மற்றும் கடத்தல் சம்மந்தமாக 181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 219 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்து மரணங்கள்:  

2020ம் ஆண்டு 137 அபாயகரமான சாலை விபத்து வழக்குகள் உட்பட 769 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன,அவற்றில் 146 பேர் மரமணமடைந்துள்ளனர்.

2019ம்  ஆண்டு 198 அபாயகரமான சாலை விபத்து வழக்குகள் உட்பட 1088 சாலை விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன,அவற்றில் 221 பேர் மரமணமடைந்துள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020ம் ஆண்டு 61 அபாயகரமான சாலை விபத்துக்கள் உட்பட 319 சாலை விபத்துக்கள் குறைக்கப்பட்டுள்ளன. சாலை விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 2019ம் ஆண்டை ஓப்பிடும்போது 75 சாலை விபத்து உயிரிழப்புக்கள் குறைக்கப்பட்டுள்ளது.

இன்று பிறந்துள்ள  புத்தாண்டில் தென்காசி மாவட்ட காவல்துறை விவேகமாகவும், துரிதமாகவும், செயல்பட்டு குற்றம் மற்றும் சாலை விபத்துக்கள் நடவாமல் தடுப்பதில் மிகுந்த அக்கரையுடன் செயல்படும் என்பதுடன் பொதுமக்கள் அனைவருக்கும் தென்காசி மாவட்ட காவல்துறையின் சார்பாக பொதுமக்களுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் இ.கா.ப அவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi District Police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->