மதுரையில் மனைவியுடன் தகாதஉறவு வைத்திருந்ததாக கொலை செய்யப்பட்ட ஒளிப்பதிவாளருக்கு தேசிய விருது; ரசிகர்கள் சோகம்..! - Seithipunal
Seithipunal


71-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று டில்லியில் அறிவிக்கப்பட்டது. இதில் பல தமிழ் திரைப்படங்களுக்கு விருத்தி கிடைத்துள்ளமை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த விருது பட்டியலில் திரைப்படங்கள் அல்லாத இதர விருதுகளில் 'லிட்டில் விங்ஸ்' என்ற தமிழ் குறும்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது அறிவிக்கப்பட்டது.  இந்த படத்திற்காக ஒளிப்பதிவு செய்த சரவணமருது சவுந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோர் விருதைப் பெறுகிறார்கள்.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் சரவணமருது சவுந்தரபாண்டி இந்த குறுந்திதர்ப்படத்தின் ஒளிப்பதிவாளர். 2023-இல் தனது மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாக கூறி சக்திவேல் என்பவர் தனது மாமனார், மைத்துனர் ஆகியோருடன் சேர்ந்து சரவணமருதுவைக் கொலைசெய்தனர். அத்துடன் அவரது உடலை கீரனூர் கண்மாய் பகுதியில் புதைத்தனர்.

அதன் பின்னர், 2023 அக்டோபர் 14-ஆம் தேதி வீட்டை விட்டுச் சென்ற சரவண மருதுவைக் காணவில்லை என அவரது சகோதரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். குறித்த புகாரின் அடிப்படையில்  போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தில் குற்றவாளிகளைக் கைது செய்தனர்.இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை வென்ற படம் 'லிட்டில் விங்ஸ்'. இயக்குனர் ராஜூ முருகன், திலானி ரபிந்திரன் தயாரித்த இப்படத்தை நவீன் என்பவர் இயக்கி இருந்தார். ராஜூமுருகனின் உதவி இயக்குனரான இவர் கந்தர்வனின் 'சனிப்பிணம்' என்ற சிறுகதையை மையமாக வைத்து  'லிட்டில் விங்ஸ்'.என்ற குறும்படத்தை உறுக்கியுள்ளார்.

இந்த படத்தை ஒளிப்பதிவு செய்த சரவணமருதுவுக்கு நேற்று சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பிறகு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளமை சினிமா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

National Award for murdered Tamil cinematographer


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->