ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின்குமாரின் தந்தைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் கவின்குமார். சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் கடந்த 27ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சுர்ஜித் என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுர்ஜித் போலீசில் சரணடைந்தார். 

இதையடுத்து போலீசார் கவின்குமார் காதலித்த இளம்பெண்ணின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர் தம்பதி சரவணன், கிருஷ்ணகுமாரி உள்ளிட்ட இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இந்தக் கொலை விவகாரத்தில் இளம்பெண்ணின் தந்தை சரவணனையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், கவின்குமார் கொலை வழக்கு கடந்த 30ம் தேதி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையடுத்து கவின்குமாரின் உடல் நேற்று முன் தினம் சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் தகனம் செய்யப்பட்டது. இதற்கிடையே, கவின்குமாரின் தந்தை சந்திரகுமாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி வந்ததுடன், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் போலீசில் மனு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், கவின்குமாரின் தந்தை சந்திரகுமாருக்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

24 hours police guard to it employee kavin father in arumugamangalam


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->