பிரபல தமிழ் திரைப்பட நடிகர் மதன்பாப் காலமானார்! - Seithipunal
Seithipunal


பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரும் , நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் மதன்பாப் காலமானார்.

எஸ். கிருஷ்ணமூர்த்தி என்னும் இயற்பெயர் கொண்ட இவர், மதன் பாப் என்று பரவலாக அறியப்படும் திரைப்பட நகைச்சுவையாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார்.மதன் பாப் தனது வேடிக்கையான முகபாவனைகள், சிரிப்பு, நீண்டுகொண்டிருக்கும் கண் இமைகளுக்குப் பெயர் பெற்றவர். காகா இராதாகிருஷ்ணனால் ஈர்க்கப்பட்டார்.

இசையமைப்பாளராகத் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராகப் பணியாற்றினார்.

அவருக்கு வயது 71 . தமிழ்,மலையாளம்,தெலுங்கும் உள்ளிட்ட மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மதன்பாப் தனது தனித்துவமான சிரிப்பின் மூலம் ரசிகர்கள் சிரிக்க வைத்தார்.

சென்னையில் 1953 ஆம் ஆண்டு பிறந்த அவர் தேவர் மகன், பிரண்ட்ஸ், வில்லன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். புற்று நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மதன்பாப் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணியளவில் உயிரிழதார். மதன்பாபின் உடல் அஞ்சலிக்காக சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Famous Tamil film actor Madhan Bap passed away


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->