முதல் தேசிய விருது : ஷாருக் கான் நெகிழ்ச்சி பதிவு! - Seithipunal
Seithipunal


100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஷாருக்கான் நடித்து இருந்தாலும் ஜவான் திரைப்படமே இவருகு தேசிய விருதை கொடுத்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து ஷாருக்கான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல இந்தித் திரைப்பட நடிகர் ஷாருக் கான்,திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்குகிறார். 1980களின் பிற்பகுதியில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கி, 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணியை தனது நண்பர்களான ஜுஹி சாவ்லா மற்றும் ஜெய் மேத்தா ஆகியோருடன் சேர்ந்து வாங்கியிருக்கிறார். 26 டிசம்பர் 2016 ஆம் ஆண்டு கைதராபாத்தில் அமைந்துள்ள மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் கவுரவ மருத்துவ பட்டம் வழங்கியது.இதனை தொடர்ந்து பல்வேறு விருதுகளுக்கு தற்போது சொந்தக்காரர் ஆகியுள்ளார் ஷாருக் கான்.

தன்னுடைய நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்திய ஷாருக் கான் தற்போது திரையில் பல வெற்றி படங்களை கொடுத்துவருகிறார்.அந்தவகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ஷாருக் கான் இரு வேடங்களில் நடித்திருப்பார். இவருடன் விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, நயன்தாரா, பிரியாமணி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. திரைப்படம் 1148 கோடி ரூபாய் வசூலித்தது.

இந்தநிலையில் நேற்று 71-வது தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்தனர் அதில் சிரந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் ஜவான் திரைப்படத்திற்காக வென்றுள்ளார். இதுவே அவர் வாங்கும் முதல் தேசிய விருதாகும்.

தன் திரைப்பயணத்தை 1992 ஆம் ஆண்டு தீவானா என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கி100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஷாருக்கான் நடித்து இருந்தாலும் ஜவான் திரைப்படமே இவருகு தேசிய விருதை கொடுத்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து ஷாருக்கான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

First national award Shahrukh Khans emotional recording


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->