Coolie படத்திற்கு தணிக்கை குழு வெளியிட்ட certificate- ஐ கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி!
Fans shocked see certificate issued by censor board film Coolie
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ''கூலி'' . இவர்களது கூட்டணியில் அமைந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக அமீர் கான், சௌபின் ஷாஹிர்,நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, ரெபா மோனிகா ஜான் மற்றும் பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையில் வெளியாகிறது.
சில நாட்களுக்கு முன்பு படத்தின் பாடலான 'கூலி தி பவர்ஹவுஸ்' பாடல் வெளியாகி ட்ரெண்டை அதிகரித்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில், இன்று மாலை படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.மேலும், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இதனிடையே, படத்திற்கு தணிக்கை குழு ''A '' சான்றிதழ் வழங்கியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படத்தின் நேர அளவு 2 மணி நேரம் 48 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் இன்று இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசப்போகும் அந்த பேச்சைக் கேக்க பலரும் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகளால் உருவாகி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பல மடங்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
Fans shocked see certificate issued by censor board film Coolie