இன்ஸ்டா காதலனுக்கு 25 பவுன் நகையைக் கொடுத்த கல்லூரி மாணவி - ராஜபாளையத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகசெந்தில். விசைத்தறிகூட அதிபரான இவரது மகள் நாக அட்சயா சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். 

இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த லிவின் என்ற வாலிபரின் அறிமுகம் கிடைத்துள்ளது. முதலில் இருவரும் நண்பர்களாக தொடங்கி பேசி வந்த நிலையில், காலப்போக்கில் அது காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து இருவரும் காதலித்து வந்தனர்.

இதையடுத்து, நாக அட்சயா கர்நாடக மாநிலத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளார். இதனைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட லிவின் நாகஅட்சயாவிடம், தற்போது நீ இங்கு வந்தால் நாம் உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் தங்குவதற்கு வீடு எதுவும் தனியாக இல்லை.

அதனால், வீடு பார்த்து விட்டு அழைத்து செல்வதாகவும் வீடு பார்ப்பதற்கு பணம் தருமாறும் கேட்டுள்ளார். இதை உண்மை என்று நம்பிய நாகஅட்சயா காதலன் லிவினை கர்நாடகாவில் இருந்து ராஜபாளையம் வரவழைத்து தனக்காக பெற்றோர் சேர்த்து வைத்திருந்த 25 பவுன் நகையை எடுத்து கொடுத்துள்ளார்.

அதனை வாங்கி கொண்டு கர்நாடகா திரும்பிய லிவின், தனக்கு பணம் போதவில்லை மேலும் ரூ.50 ஆயிரம் பணம் வேண்டும் என்று நாகஅட்சயாவிடம் கேட்டுள்ளார். இதற்கிடையே காதலன் லிவினின் பேச்சு, நடவடிக்கையில் சந்தேகமடைந்த நாகஅட்சயா லிவின் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு மீண்டும் ராஜபாளையத்திற்கு வந்து அந்த பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு லிவினிடம் கூறியுள்ளார்.

அதன் படி ராஜபாளையத்திற்கு வந்த லிவினை போலீசார் திட்டமிட்டபடி சுற்றி வளைத்து பிடித்து நாகஅட்சயாவிடம் இருந்து பெற்ற 25 பவுன் நகை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியிடம் 25 பவுன் நகை மோசடி செய்யப்பட்ட சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

college student gold gives to instagram boyfriend in viruthunagar


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->