பெல்லந்தூர் : தெருநாயை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர கும்பல்!
Karnataka assault Street dog
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிக்கநாயக்கனஹள்ளி பகுதியில் ஏற்பட்ட கொடூரச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஒரு தெருநாய் இளைஞர்களின் குழுவால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு இலக்கானதாக விலங்கு நல ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
பெல்லந்தூரைச் சேர்ந்த அந்த ஆர்வலர் தனது புகாரில், அக்டோபர் 13ம் தேதி இரவு அருகிலுள்ள ஒரு கொட்டகையில் சிலர் தெருநாயை கொடுமைப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததை தானே கண்டதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து விலங்குகள் வதை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
போலீசார் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் பகுதியைச் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நாயை கண்டுபிடித்தனர். நாயின் உடலில், குறிப்பாக அதன் பிறப்புறுப்பில் காயங்கள் இருப்பதாகவும், மருத்துவ பரிசோதனைக்குப் பிறகே பாலியல் வன்கொடுமை நடந்ததா என்பது உறுதி செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
English Summary
Karnataka assault Street dog