ஆசிரியர்களின் தொடர்ச்சியான துன்புறுத்தலால் மனஅழுத்தம்... 6-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி!
Rajasthan private school suicide attempt
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் நிகழ்ந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு 6ம் வகுப்பு படித்து வந்த 9 வயது மாணவி அமிரா, கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளியின் 4வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஆசிரியர்களின் தொடர்ச்சியான துன்புறுத்தலால் மனஅழுத்தம் அடைந்த அமிரா தற்கொலைக்கு துணிந்ததாக கூறப்படுகிறது. மாணவியின் மரணத்துக்குப் பின்னும் பள்ளி நிர்வாகம் சம்பவத்தை மறைத்து வைத்ததாக பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், பள்ளியின் 4வது மாடியில் இருந்து சிறுமி கீழே குதிக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி, பரவலான கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கல்வி துறையினர் இதனை மிகப்பெரும் அலட்சியமாகக் கூறி, சம்பவத்தின் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வலியுறுத்தியுள்ளனர்.
போலீசார் தற்போது பள்ளி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Rajasthan private school suicide attempt