இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட சிறார்களின் சமூக வலைத்தளப் பயன்பாட்டுக்கு தடை கோரி வழக்கு! உச்சநீதிமன்றம் மறுப்பு! - Seithipunal
Seithipunal


நாட்டில் 14 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களின் சமூக வலைத்தளப் பயன்பாட்டுக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்தது.

இந்த மனுவில், சீனா மற்றும் ஆஸ்திரேலியாவில் சிறார்களுக்கு சமூக வலைத்தளப் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளதை முன்வைத்து, இந்தியாவிலும் இதே மாதிரி தடை அமல்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம், “நேபாளத்தில் சமூக வலைத்தளப் பயன்பாட்டை நிறுத்தியபோது என்ன விளைவுகள் ஏற்பட்டன என்பதை பார்த்தீர்களா?” என்று சுட்டிக்காட்டி, மனுவை தள்ளுபடி செய்தது.

சிறார்களில் சமூக வலைத்தள அடிமைத்தனம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், மனநிலையும் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. பல இளைஞர்கள் ரீல்ஸ் எடுப்பதில் உயிரிழப்பதும் சமூக கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தூத்துக்குடியில் ரயில் மீது ஏறி ரீல்ஸ் எடுக்க முயன்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதற்குச் சான்று.

இதேபோல், அண்மையில் நேபாளத்தில் சமூக வலைத்தளத் தடை அமல்படுத்தப்பட்டபோது, ஜென்-இஸட் தலைமுறை இளைஞர்கள் கொதித்தெழ்ந்து பெரும் வன்முறையை ஏற்படுத்தினர். அதன் பின்னர் அந்நாட்டில் ஆளும் அரசு பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு, சமூக வலைத்தளத் தடைகள் சமூக அமைதிக்கும் அரசியல் நிலைத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற எண்ணத்தில், இந்திய உச்ச நீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court refuses petition ban social media use minors


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...


செய்திகள்



Seithipunal
--> -->