பாலியல் வழக்கு குற்றவாளியாக நிரூபணம்: முன்னாள் எம்​பி ​பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..! - Seithipunal
Seithipunal


முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், கர்​நாடக முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்​கொடுமை வழக்​கில் குற்​ற​வாளி என பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது. தற்போது, குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

மஜத முன்​னாள் எம்​பி​யான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்​வேறு பெண்​களு​டன் நெருக்​க​மாக இருக்​கும் 03 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வீடியோக்​கள் கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்​ரல் மாதம் வெளி​யாகி பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி நாடு குழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்து.

பிரஜ்வல் ரேவண்ணாவின் வீட்டு பணிப்​பெண், மஜத கிராம பஞ்​சா​யத்து தலைவி உட்பட 04 பெண்​கள் அவருக்கு எதி​ராக புகார் அளித்​தனர். அதன்​பேரில் அவர் மீது 05 பாலியல் வன்​கொடுமை வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. புகாரின் அடிப்படையில் கைது செய்​யப்​பட்ட பிரஜ்வல் ரேவண்ணா பெங்​களூரு மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். இந்த வழக்கு தொடர்பில் சிறப்பு விசா​ரணை பிரிவு போலீ​ஸார் 1,632 பக்க குற்​றப்​பத்​திரி​கையை தாக்​கல் செய்​துள்ளனர்.

அதன்படி, பெங்​களூரு​வில் மக்​கள் பிர​தி​நி​தி​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றத்​தில் வழக்கு நடை​பெற்றது. வழக்கில் அனைத்​து கட்ட விசா​ரணை​யும் நிறைவடைந்த நிலை​யில், பெங்​களூரு சிறப்பு நீதி​மன்ற நீதிபதி சந்​தோஷ் கஜனன் பட், நேற்று பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பளித்தார்.

பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்​கொடுமை குற்​றங்​கள் அரசு தரப்​பால் சந்​தேகத்​துக்​கிட​மின்றி நிரூபிக்​கப்​பட்​டுள்​ள நிலையில்,  அதற்​கான சாட்​சி​யங்​களும், ஆவணங்​களும் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. அதன் அடிப்​படை​யில் பிரஜ்வல் ரேவண்ணா குற்​ற​வாளி என்​பது உறு​தி​யாகி​யுள்​ளது.  அதன்படி இன்று தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்ட நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் சாகும் வரை அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் நீதிபதி சந்தோஷ் பட் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.

முன்னதாக, பிரஜ்வல் ரேவண்ணா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா, "நான் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், எந்தப் பெண்ணும் தானாக முன்வந்து புகார் அளிக்கவில்லை. தேர்தலுக்கு 06 மாதங்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது.

அரசுத் தரப்பு வேண்டுமென்றே அவர்களை அழைத்து வந்து புகார் அளிக்க வைத்தது. எனக்கு குடும்பம் இருக்கிறது. 06 மாதங்களாக நான் எனது அம்மாவையும், அப்பாவையும் பார்க்கவில்லை. தயவு செய்து எனக்கு குறைவான தண்டனை கொடுங்கள். என் வாழ்க்கையில் நான் செய்த ஒரே தவறு அரசியலில் வேகமாக வளர்வதுதான்" என குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Court sentences Prajwal Revanna to life imprisonment in sex case


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->