அன்று எதிர்க்கட்சி தலைவராக பேசியதற்கு மன்னிப்பு கேட்பீர்களா மு.க.ஸ்டாலின் அவர்களே... பாஜக நாராயணன் கேள்வி!
BJP Narayanan Condemn to DMK MK Stalin
பாரதிய ஜனதா கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தேர்தல் ஆணையம் மூலமாக குறுக்கு வழியில் திமுக வை வீழ்த்த முயற்சி. எதிர்க்கட்சிகளை சேர்ந்த சிலர், எஸ் ஐ ஆர் பணியை நடைமுறைப்படுத்துவது மாநில அரசின் பணியாளர்கள் தானே? பிறகு ஏன் திமுக எதிர்க்க வேண்டும்? என்று புரிதலின்றி பேசுகிறார்கள். ஒரு பணியாளரை தேர்தல் ஆணையம் தன்னுடைய பணிக்காக எடுத்த நொடியில் இருந்தே, அவர் தேர்தல் ஆணையத்துக்கு கட்டுப்பட்டு செயல்படுவாரே தவிர, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார்" : முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று.
"தேர்தல் ஆணையம் மூலமாக குறுக்கு வழியில் திமுக வை வீழ்த்த முயற்சி. தேர்தல் ஆணையம், மாநில அரசு ஊழியர்கள், காவல் துறையினர், பாஜக ஆகியவர்களுடன் கூட்டணி அமைத்து திமுக வை அழிக்க சதி செய்கிறது அ தி மு க அரசு" என்று ஜனவரி 17, 2020 அன்று அன்றைய எதிர்க்கட்சி தலைவராகிய நீங்கள் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னீர்களா இல்லையா? தொடர்ந்து திமுக தோல்வியுறும் போதெல்லாம் காவல் துறையினர் மாநில அரசு ஊழியர்களை ஏளனமாக திமுகவினர் பேசியது உண்டா இல்லையா?
கடந்த 60 வருடங்களாக மாநில அரசு ஊழியர்கள் கட்சி விசுவாசிகளாக தான் இருக்கின்றனர் என்பது தமிழகத்தின் வரலாறு தானே!
சரி! மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சொல்வது போல் தமிழக காவல்துறை தலைவரை நியமியுங்களேன்! இந்திய அரசின் நடைமுறை தானே அது? ஏன்? காவல் துறை தலைவர் உங்களுக்கு ஏற்றவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தானே?
எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பீர்களா? மன்னிப்பு கேட்பீர்களா மு.க.ஸ்டாலின் அவர்களே? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP Narayanan Condemn to DMK MK Stalin