உதயநிதியை பார்த்தல் பால்டாயில் தான் நினைவுக்கு வருகிறது - நடிகை காயத்திரி ரகுராம் பதிலடி! - Seithipunal
Seithipunal


அதிமுக நிர்வாகியும், நடிகையுமான காயத்திரி ரகுராம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நீங்கள் பல புத்தகங்களை வெளியிட்டுள்ளீர்கள். 45 நபர்களை நல்ல பேச்சாளர்களாக கண்டுபிடித்துள்ளீர்கள். ஆனால் அதில் உங்கள் புரோக்கர் ஆட்டுக்குட்டியை காணவில்லையே? அவர் 20,000 புத்தகங்களைப் படித்தவரல்லவா. அந்த ஸ்டாலில் இருந்து நீங்கள் எத்தனை புத்தகங்களைப் படித்தீர்கள்?

அயர்ன் மேன் போட்டியில் ஆட்டுக் குட்டியுடன் இவரால் போட்டியிட முடியுமா? போட்டியில், கடைசி இடத்தை தான் அவர் பிடித்துள்ளார். கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க தம்பி. முதலில் உதய், அவருடன் போட்டியிட்டும். அதன் பிறகு நம் நிரந்தர பொதுச்செயலாளர் பற்றி அவர் பேச அவருக்கு தகுதி உள்ளதா என்பதை பார்க்கலாம். 

உதய் அவர்களை பார்த்தால் எங்களுக்கு இரு விஷயங்கள் தான் நினைவுக்கு வருகிறது. ஒன்று பால்டாயில், இன்னொன்று #NNN.

இது அறிவு திருவிழா அல்ல, இது சரிவு திருவிழா. மேடையில் நாகரிகத்துடன், பொறுப்பான துணை முதல்வராகப் பேசுங்கள். கோத்தடிமைகளிடம் ஒரு ராஜாவைப் போல பேச வேண்டாம்.

நாங்கள் உங்களைப் போல கீழ்த்தரமாகப் பேச விரும்பவில்லை. நீங்கள் தமிழக மக்களுக்கு என்ன செய்தீர்கள்? எதையுமே செய்யவில்லை என்று மக்கள் சொல்வது எங்கள் செவிகளில் கேட்கிறது. துப்புரவுப் பணியாளர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? மாணவர்களுக்கு பாதுகாப்பான, தரமான கல்வியை பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலம் உங்களால் வழங்க முடியவில்லையே!

மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் நிலைக்கு இந்த ஆட்சியில் தள்ளப்பட்டுள்ளனர். முதல்வர் மற்றும் துணை முதல்வரை வரவேற்க அவர்கள் வெயிலில் நிற்க வைக்கப்படுகின்றனர். வேலை நாட்களில் மாணவர்களுக்கு விடுமுறை அளித்துவிட்டு, பள்ளிகளில் உங்களின் "ஸ்டாலின் திட்டம்" செயல்படுத்தப்படுகிறது. முதல்வர் பங்கேற்கும் விழாக்களில் மாணவர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டனர். ஆனால் அங்கு மாணவிகள் அணிந்துள்ள கருப்பு துப்பட்டாவை கழற்றச் சொன்னார்கள். மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர். மாணவர்கள் சாதி பாகுபாடு மற்றும் சண்டைகளை எதிர்கொள்கின்றனர். திமுக அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்ததா?

இவர்களுக்கு எல்லாம் என்ன தகுதி இருக்கிறது? மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி வைத்திருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Gayatri reply to DyCM Udhay


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->