“அரோரா, விளையாட முடியாது என்றால் இப்போதே வெளியே போங்க!” — வெளியே அனுப்ப ரெடி - ஷாக் கொடுத்த விஜய் சேதுபதி!
Arora if you canot play then go out now Ready to send out Vijay Sethupathi gives a shock
பிக்பாஸ் சீசன் 9 இன்றைய புரோமோவில் நடிகர் விஜய் சேதுபதி திடீரென கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போட்டியாளர்களிடையே “யார் விளையாட்டில் சீரியஸாக இல்லை?” என்ற கேள்வியை முன்வைத்து அவர் நடத்திய ரோஸ்ட் செஷனில், அரோரா முக்கிய டார்கெட்டாக மாறியுள்ளார்.
இன்றைய புரோமோவில் விஜய் சேதுபதி கூறுகிறார்:“இந்த ஒரு நாள் கழிந்தால் போதும்... ஒவ்வொரு வாரமும் காசு பேங்க் அக்கவுண்டில் விழும் என்பதற்காக தான் சிலர் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்கள்!”
அந்தக் கேள்விக்குப் பதிலாக சபரி, அமித் பார்கவ், கனி உள்ளிட்ட போட்டியாளர்கள் அனைவரும் ஒரே குரலில் ‘அரோரா’ என்ற பெயரை சொல்கின்றனர்.
இதனால் நேரடியாக அரோராவை நோக்கி விஜய் சேதுபதி,“உங்களிடம் எல்லாருக்கும் நம்பிக்கை இருக்கு — நீங்க நல்லா விளையாடுவீங்கன்னு. ஆனா நீங்க இன்னும் விளையாட்டுக்குள் வரலை. பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கவே வேண்டாம். உண்மையிலேயே விளையாட முடியாது என்றால், இப்போவே சொல்லுங்க... பிக்பாஸ்ஸிடம் சொல்லி உங்களை வெளியே அனுப்ப சொல்றேன்!”என்று கடுமையாக கூறியதும், அரோரா முகம் முழுக்க அதிர்ச்சியாக மாறியது.
அரோரா, இதுவரை துஷாருடன் அதிக நேரம் கழித்து, அவரது ஆட்டத்தை பாதித்ததாகவும்,துஷார் வெளியேற்றப்படுவதற்கான முக்கிய காரணம் அரோராதான் எனவும் ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இப்போது விஜய் சேதுபதியின் நேரடி கண்டிப்பு வெளிவந்துள்ளதால்,“இன்னும் அரோரா மாறுவாரா?”, “இப்போது தான் ரியாலாக விளையாடுவாரா?” என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் தீவிரமாக எழுந்துள்ளன.
பிக்பாஸ் வீட்டில் தற்போது கனி, பிஜே, ரம்யா, சுபி உள்ளிட்டோர் சேர்ந்து குரூப்பாக “சேப் கேம்” ஆடுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.அவர்களின் “முகத்திரையை கிழித்து தொங்கவிட வேண்டும்” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியிடம் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என கூறப்பட்ட நிலையில், நேற்றைய தினம் துஷார் வெளியேற்றப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து இன்று இன்னொரு போட்டியாளர் வெளியேறுவாரா? அல்லது இந்த வாரமும் ஒரே ஒரு எவிக்ஷனாக முடிவடையுமா? என்பதற்கான ஆவல் அதிகரித்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 9 ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், பலர் இன்னும் விளையாட்டுக்குள் வராமல் இருப்பதை விஜய் சேதுபதி சுட்டிக்காட்டியுள்ளார்.அரோரா மீது அவர் வைத்த கண்டிப்பு, வீட்டுக்குள் சூழ்நிலையை தலைகீழாக மாற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
English Summary
Arora if you canot play then go out now Ready to send out Vijay Sethupathi gives a shock