டெல்லி கார் வெடிப்பு: அனைத்துக் கோணங்களிலும் விசாரணை – அமித் ஷா உறுதி!
Delhi Red Fort blast amitshah
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, டெல்லி காவல் ஆணையருடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்து விவரங்களைக் கேட்டறிந்த பிறகு செய்தியாளர்களிடம் அமித் ஷா கூறியதாவது:
"செங்கோட்டை அருகே கார் வெடித்த விபத்து குறித்து எந்த ஒரு கோணத்தையும் விட்டுவிடாமல் அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும். வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைச் சேகரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன."
மேலும், "கார் வெடிப்புச் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் செல்ல உள்ளேன். அத்துடன், இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளேன்."
"இந்தக் கார் வெடிப்புக்கு பின்புலத்தில் செயல்பட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிய விரைவான விசாரணை நடத்தப்படும். விசாரணையின் முடிவில் முழு உண்மையையும் மக்கள் முன்பு வெளிப்படையாக வைப்போம்," என்று அவர் உறுதியளித்தார்
English Summary
Delhi Red Fort blast amitshah