டெல்லி கார் வெடிப்பு: என்ன நடந்தது? அந்த கார்...? டெல்லி காவல் ஆணையர் பரபரப்பு பேட்டி!
Delhi Red Fort Blast Delhi Police Commissioner press meet
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே கார் வெடித்துச் சிதறிய விபத்து குறித்து, டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்சா விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பின் விளக்கமளித்தார்.
அவர் கூறியதாவது:
வெடித்த கார்: முதலில் வெடித்தது மாருதி ஈகோ கார். முதற்கட்டத் தகவலின்படி, அந்தக் காரில் பல நபர்கள் பயணித்ததாகத் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் தன்மை: மாலை 6.52 மணியளவில், கார் மெதுவாகப் பயணித்து வந்தபோது வெடித்துள்ளது. இதனால், அருகில் இருந்த மற்ற கார்கள் மற்றும் ஆட்டோக்களிலும் தீ பரவி விபத்து பெரிதாகியுள்ளது.
தடயவியல் ஆய்வு: தற்போது புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்படுகின்றன. முழுமையான விசாரணைக்குப் பிறகுதான் மற்ற தகவல்களை வெளியிட முடியும்.
பயங்கரவாத கோணம் குறித்த தகவல்கள்
சம்பவ இடத்தில் பள்ளம் ஏதும் உருவாகவில்லை என்றும், காயமடைந்தவர்களிடம் வெடிப்பொருள் சிதறல்களால் ஏற்படும் காயங்களின் அறிகுறிகள் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இருப்பினும், வெடித்துச் சிதறிய காரில் பயணிகள் இருந்ததாக ஆணையர் குறிப்பிட்டுள்ளதால், இது பயங்கரவாதத் தாக்குதல் கோணத்திலும் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
English Summary
Delhi Red Fort Blast Delhi Police Commissioner press meet