பேட் கேர்ள் டீசர் குறித்து வெற்றிமாறன் மீது ஐஜியிடம் புகார்...! படத்தின் வெளியீடு தள்ளி போகுமா? - Seithipunal
Seithipunal


பிரபல இயக்குனர் 'வெற்றிமாறன்' அவர்களின் 'பேட் கேர்ள்(BAD GIRL )' திரைப்படம் டீசர் விவகாரம்.வர்ஷா பரத் இயக்கத்தில் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பேட் கேர்ள்'.

இது தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது ஐ.ஜி அலுவலகத்தில் தற்போது புகாரளிக்கப்பட்டுள்ளது.இதில், சிறுவர்களை தவறாக சித்தரித்து கதை வடிவமைத்துள்ளதாக  தொடரப்பட்ட வழக்கில் படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் பதிவிட்டதை நீக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்காவிடம் புகாரளித்தார். அதில், சிறுவர்-சிறுமியரின் ஆபாச காட்சிகள் இடம்பெற்ற 'பேட் கேர்ள்' திரைப்பட டீசரை தயாரித்த தயாரிப்பாளர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப், இயக்குனர் வர்ஷா பரத், நடிகர்கள் உள்ளிட்ட திரைப்படக்குழுவினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 'பேட் கேர்ள்' படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா? என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Complaint to IG against Vetrimaaran regarding Bad Girl teaser Will the films release be postponed


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->