மிரளவிடும் கூலி பட ட்ரெய்லர் - 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை.!
kooli movie trailer cross 10 million views
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர் தாஜினியுடன் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் பாடலான கூலி தி பவர்ஹவுஸ் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், கூலி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றுது. இந்த விழாவில் கூலி படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து யூடியூபில் வெளியான கூலி டிரெய்லர் விரைவில் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
English Summary
kooli movie trailer cross 10 million views