இது என் ஆசை...! எதிர்காலத்தில் இவருடன் இணைந்து பணியாற்ற நம்பிக்கை கொண்டுள்ளேன்...! - விஜய் தேவரகொண்டா
This is my wish I hope to work with him future Vijay Deverakonda
பிரபல தெலுங்கு திரையுலக நடிகர் ''விஜய் தேவரகொண்டா'' தற்போது குஷியில் இருக்கிறார். அவர் தற்போது நடித்து திரையில் வெளிவந்துள்ள ''கிங்டம்'' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி,வெளியான 2 நாட்களில் ரூ. 53 கோடி தற்போது வரை வசூலித்துள்ளது.இந்த சூழ்நிலையில், கிங்டமின் வெளியீட்டிற்குப் பிந்தைய புரமோஷனின்போது, புஷ்பா பட இயக்குனர் சுகுமார் கிங்டமைப் பார்த்து தன்னை அழைத்து பாராட்டியதாக விஜய் தேவரகொண்டா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, சுகுமார் இயக்கத்தில் நீண்ட காலமாக தாமதமாகி வரும் தனது படம் குறித்து விஜய் தேவரகொண்டா மனம் திறந்து பேசினார்.அப்போது அவர் தெரிவிக்கையில், ''அர்ஜுன் ரெட்டி பட நாட்களிலிருந்தே நாங்கள் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறோம்.
எதிர்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்று நம்புகிறேன். இப்போதைக்கு, என் கையில் இருக்கும் படங்களில் நான் கவனம் செலுத்துகிறேன்'' என்று தெரிவித்தார்.இவர்களது கூட்டணியில் ஒரு படம் 2020-ம் ஆண்டில் மறைந்த தயாரிப்பாளர் கேதர் செலகம்செட்டியால் அறிவிக்கப்பட்டது. ஆனால்,அந்தப் படம் திரைக்கு வராமல், தொடர்ந்து கிடப்பில் இருக்கிறது.
English Summary
This is my wish I hope to work with him future Vijay Deverakonda