சுதந்திரப் போராட்ட வீரர் திரு.ஸ்ரீ பிரகாசா அவர்கள் பிறந்ததினம்!. - Seithipunal
Seithipunal


சுதந்திரப் போராட்ட வீரர் திரு.ஸ்ரீ பிரகாசா அவர்கள் பிறந்ததினம்!.

ஸ்ரீ பிரகாசா ( Sri Prakasa ஆகஸ்ட் 3, 1890 - ஜூன் 23, 1971) ஒரு இந்திய அரசியல்வாதி, சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சிறந்த நிர்வாகி ஆவார். 1947 முதல் 1949 வரை பாகிஸ்தானுக்கான இந்தியாவின் முதல் உயர் ஆணையராகவும், 1949 முதல் 1950 வரை அசாமின் ஆளுநராகவும், 1952 முதல் 1956 வரை மெட்ராஸின் ஆளுநராகவும், 1956 முதல் 1962 வரை பம்பாய் ஆளுநராகவும் பணியாற்றினார்.

ஸ்ரீ பிரகாசா 1890 இல் வாரணாசியில் பிறந்தார். அவரது ஆரம்ப நாட்களில், அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, அவர் நிர்வாகியாகவும் அமைச்சரவை அமைச்சராகவும் பணியாற்றினார். ஸ்ரீ பிரகாசர் 1971 இல் தனது 80 வயதில் மறைந்தார்.


 திரு.மைதிலி சரண் குப்த் அவர்கள் பிறந்ததினம்

விடுதலைப் போராட்ட வீரரும், தேசிய.கவிஞருமான திரு.மைதிலி சரண் குப்த் அவர்கள் பிறந்ததினம்!.

 விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கவிஞருமான மைதிலி சரண் குப்த் 1886ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி அருகே சிர்கான் என்ற ஊரில் பிறந்தார். 

12 வயதில் இவர் எழுதிய கவிதையை பார்த்து நெகிழ்ந்துபோன இவருடைய அப்பா, என்னைவிட ஆயிரம் மடங்கு சிறந்த கவிஞனாக மாறுவாய் என்று ஆசிர்வதித்தார்.

 இவரது முதல் முக்கிய படைப்பு 'ரங் மே பங்' ஆகும். அதை தொடர்ந்து சாகேத், பாரத் பாரதி, ஜெயத்ரத் வத், கிஸான், விகட் பட், வைதாலிக், குணால், விஸ்வராஜ்ய, ஜுஹஷ், காபா - கர்பலா ஆகியவற்றை படைத்துள்ளார்.

 மகாத்மா காந்தி, வினோபா பாவே போன்ற தலைவர்களால் ஈர்க்கப்பட்டு இவர் பல விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். 

 மகாத்மா காந்தி இவரை 'ராஷ்டிர கவி' என்று புகழாரம் சூட்டினார். இவர் மங்கள் பிரசாத் விருது, ஹிந்துஸ்தானி அகாடமி விருது, பத்மபூஷண் விருதும் பெற்றவர்.

 தன் வாழ்நாள் கடைசி வரை எழுதிக்கொண்டே இருந்த இவர் தனது 78வது வயதில் 1964 டிசம்பர் 12 ஆம் தேதி அன்று மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It is the birthday of the freedom fighter Mr Sri Prakash


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->