மாதம்பட்டி ரங்கராஜ் – கிரிஸில்டா விவகாரம்: நீகிரிஸில்டாவின் தாய் கதறல்?.. அவர் சொன்னது இதுவா?
Madampatti Rangaraj Grisilda affair Nigrisilda mother is crying Is this what she said
தமிழ் சினிமாவும் டிவி உலகமும் தற்போது பேசிக்கொண்டிருக்கும் அதிரடி சர்ச்சை மாதம்பட்டி ரங்கராஜைச் சுற்றித்தான் சுழல்கிறது.
பிரபல சமையல் கலைஞரும், மெஹந்தி சர்க்கஸ் படத்தின் ஹீரோவுமான ரங்கராஜை ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, “தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்” என்று குற்றம் சாட்டி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தது பெரிய பரபரப்பை கிளப்பியது.
முன்னணி பிரபலங்களின் வீட்டில் சமையல் செய்து பெயர் பெற்றவர் ரங்கராஜ். சினிமாவில் பெரிய வரவேற்பு கிடைக்காதபோதும், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டு புகழ் பெற்றார்.
ஆனால், தனக்கு ரங்கராஜுடன் திருமணம் நடந்துவிட்டதாக கூறி கிரிஸில்டா புகைப்படங்களையும் வெளியிட்டார். அதேசமயம், ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடனும் குடும்ப வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
அவரது வாழ்க்கைச் சுமூக நிலைமையை குலைத்துவிட்டது கிரிஸில்டாவின் புகார்தான். சில நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்த அவர், நேற்று செய்தியாளர்களிடம் –
“என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் பொறுப்பு. என்னுடைய புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதை தடுத்துவருகிறார்” எனக் குற்றம் சாட்டினார்.இதற்கு எதிராக ரங்கராஜ் நீதிமன்றத்தில் கிரிஸில்டா மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதேவேளை, கிரிஸில்டாவின் தாய் அளித்ததாகக் கூறப்படும் பேட்டி சமூக வலைதளங்களில் பரவுகிறது. அதில்,
“என் மகளை ஒருபோதும் அடித்து வளர்க்கவில்லை. ஆனால் ரங்கராஜ், கர்ப்பத்தை கலைக்க சொன்னதற்காக அவளை கடுமையாக தாக்கினார். அதனால் அவளுக்கு கேட்கும் திறனே பாதிக்கப்பட்டது. என் மகள் எத்தனை நாட்கள் அடிகளைத் தாங்கியதை எனக்கே மறைத்துவிட்டார்” என்று அதிர்ச்சிகரமாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கு தற்போது நீதிமன்றம் – காவல் துறை – மீடியா மூன்றிலும் வெடித்துச் சிதறி வருகிறது. தமிழ் சினிமா உலகம் முழுவதும் இப்பிரச்சனை பெரும் விவாதமாக மாறி விட்டது.
English Summary
Madampatti Rangaraj Grisilda affair Nigrisilda mother is crying Is this what she said