தங்கச்சி வீட்டில் தங்கிய கர்ப்பிணி மனைவி - ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்.!!
pregnant lady murder in uttar pradesh
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டம் ஜிதவ் கேட் பகுதியை சேர்ந்தவர்கள் ரவிசங்கர் - ஸ்வப்னா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணமான நிலையில் ஸ்வப்னா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
திருமணமான சில நாட்களில் இருந்தே தம்பதியினருக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஸ்வப்னா கடந்த 5 மாதங்களாக திருமணமான தனது தங்கையின் வீட்டில் தங்கியுள்ளார். இதனால் ரவிசங்கர் மிகுந்த ஆத்திரமடைந்துள்ளார்.

இந்த நிலையில், ரவிசங்கர் நேற்று தனது மனைவியின் சகோதரி வீட்டிற்கு சென்று மனைவியை சமாதானம் செய்வதுபோல் பேசி தனியாக அழைத்து சென்று தான் மறைத்து கொண்டு வந்த கத்தியால் ஸ்வப்னாவை சரமாரியாக குத்திக்கொலை செய்துள்ளார்.
பின்னர் ரவிசங்கர் தான் மனைவியை கொலை செய்தது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதைக்கேட்டு அதிர்சியடைந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிசங்கரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் உயிரிழந்த கர்ப்பிணி பெண் ஸ்வப்னாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
pregnant lady murder in uttar pradesh