அவர் சிரிப்பு ஒரு யுனிக்கான ஐகான் - மதன் பாபு மறைவுக்கு மதுரை முத்து இரங்கல்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரைப்படத்தின் நகைச்சுவை நடிகர் மதன்பாப் நேற்று மாலை  உயிரிழந்ததையடுத்து நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தியும், இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர். அந்த வகையில், நடிகர் மதுரை முத்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, ''அவர் சிரித்தாலே எல்லோருக்கும் அது தொற்றிக்கொள்ளும். அவ்வளவு ஒரு யுனிக்கான ஐகான் அவர்.

நான் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது முதல் நீதிபதியாக இருந்தவர். அவருடன் 7 ஆண்டுகாலம் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் பயணித்தேன். அதன் பின்பு 4 ஆண்டுகள் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் அவருடன் பயணித்தேன்.

இயக்குனர் ராஜ் குமார் எப்படி என்னை அறிமுகப்படுத்தினாரோ அதேபோல மதுரை முத்து எங்கள் சொத்து என்று சொல்லி முதல் எபிசோடில் ஆரம்பித்தார். அவருடைய வாய் முகூர்த்தம் எனக்கு பெரிய பெயரை வாங்கி கொடுத்தது.

எங்களை மாதிரி கிராம புறத்தில் இருந்து வரும் கலைஞர்களை உற்சாகப்படுத்தி கொண்டே இருப்பார். இப்ப வரைக்கும் என்னை உற்சாகப்படுத்தி கொண்டிருந்தவர். இன்னும் 20 ஆண்டுகள் நம்மை அவர் சிரிக்க வைத்திருக்கலாம். அதற்குள் எங்களையும் சிரிக்க வைக்க வாருங்கள் என்று சொல்லி இறைவன் அழைத்துக்கொண்டார். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor madurai muthu condoles madhan babu died


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->