இடஒதுக்கீடு உரிமை கோரி, உச்ச நீதிமன்றத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு..!! - Seithipunal
Seithipunal


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் டி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ கல்வியில், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சத ஒதுக்கீட்டை நாடு முழுவதும் வழங்க கூறி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், " மருத்துவ கல்வியில், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சத ஒதுக்கீட்டை நாடு முழுவதும் வழங்கவும், தமிழ்நாடு அரசு தனது இட ஒதுக்கீட்டுக் கொள்கையை  அமலாக்க அனுமதிக்கவும் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உச்சநீதிமன்றத்தில் கட்டளை மனு தாக்கல் செய்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அதன் பொதுச் செயலாளரான டி.ராஜா, உச்ச நீதிமன்றம் முன்பாக 29.5.2020 அன்று நாடு முழுமையிலும் மருத்துவக் கல்விக்கு 27 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு ஒதுக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, உச்சநீதிமன்றத்தில் கட்டளை மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்தக் கட்டளை மனு வாயிலாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உச்சநீதிமன்றத்தின் முன்பு வைத்துள்ள வேண்டுதல் வருமாறு:

அகில இந்திய அளவில் மருத்துவ கல்விக்கான இடங்களை நிரப்புவது சம்பந்தமாக, தேர்வுகளுக்கான தேசிய வாரியம் 95 2020 அன்று நீட் பி.ஜி. 2020 முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணங்களை ஆணையிட்டுத் தருவித்து, அந்த முடிவை ரத்து செய்து உத்திரவிட வேண்டும். 

தமிழ்நாட்டில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் இளநிலை முதுநிலை மற்றும் பட்டயப் படிப்புகளில், அகில இந்திய கோட்டா முறைக்காக, (மத்திய அரசின் மருத்துவ கல்வி நிறுவனங்கள் தவிர்த்து) மாநில அரசு ஒப்படைத்த (சரண்டர் செய்த) மருத்துவக்கல்வி இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 50% ஒதுக்கீட்டை 2020-2021 கல்வியாண்டில் அமலாக்க உத்தரவிடவேண்டும். மேலும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு தமிழ்நாடு சட்டம் 1994 படி ஒதுக்கீடு வழங்குவதை தொடர்ந்து அமலாக்கி வரவும், அதேபோன்று மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களில் உள்ள இட ஒதுக்கீட்டு சட்டங்களை அமுலாக்கவும் உத்தரவிட வேண்டும்.

இந்த மனு நிலுவையில் இருக்கும் நேரத்தில்,  இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்காமல், 9.5.2020 ல் வெளியிடப்பட்டுள்ள நீட் பிஜி 2020 முடிவுகளின் அடிப்படையில் அகில இந்திய கவுன்சிலிங்கை எந்த வகையிலும் தமிழ்நாட்டில் துவங்க கூடாது என எதிர்மனுதாரர் அரசாங்கங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் உச்சநீதிமன்றத்தை கோரியிருக்கிறார்.

மேலும் இந்த மனு நிலுவையில் இருக்கும் நேரத்தில்,  இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்காமல்,  நீட் யுஜி 2020யை நடத்துவதற்கு தமிழ்நாட்டில் எந்தவிதத்திலும் முயற்சி மேற்கொள்ள கூடாது  எனவும் எதிர்மனுதாரர் அரசாங்கங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த மனு கோருகிறது. இந்த வழக்கின் சூழலையும் உண்மைகளையும் கருத்திற்கொண்டு இதற்கு பொருத்தமான யாதொரு உத்தரவையும்  உச்சநீதிமன்றம் வெளியிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டுகிறோம் என்று மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது " என்று கூறப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CPI Appeal Delhi high court about OBC Medical quota


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal