தென்மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியது! விரைவில் கேரளாவில்!
Southwest Monsoon IMD weatherupdate
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை கடந்து செல்லும். இக்காலப்பகுதியில் நாட்டின் பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்வது வழக்கமாகும்.
பருவமழை பொதுவாக அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் ஆரம்பித்து, குமரிமுனை, கேரளா வழியாக வடக்கு இந்தியாவுக்கு விரிவடைகிறது. கொளுத்தும் வெயிலுக்குப் பின் வந்தீடும் பருவமழை, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் நம்பிக்கையாகவே இருக்கிறது.
இந்த ஆண்டு, பருவமழை வழக்கமான காலத்தைவிட சற்றே விரைவாக தொடங்கியுள்ளது. தெற்கு அந்தமான், நிக்கோபார் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், மே 27ஆம் தேதி கேரளாவில் பருவமழை படிப்படியாக நுழையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் தமிழகத்துடனும் மற்ற மாநிலங்களுடனும் பரவுவதாக வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மழைக்காலம் முன்னதாகவே வருவதால், விவசாயம் மற்றும் நீர்தேக்க திட்டங்களில் சுறுசுறுப்பான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன.
English Summary
Southwest Monsoon IMD weatherupdate