சுவையான மீல்மேக்கர் குழம்பு - எப்படி செய்வது? - Seithipunal
Seithipunal


மீல்மேக்கர் குழம்பு எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:-

மீல்மேக்கர், தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, முந்திரி, பூண்டு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பிரிஞ்சி இலை, பட்டை, வெந்தயம், மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், சோம்புத்தூள், உப்பு. 

செய்முறை:-

* முதலில் ஒரு கப் மீல்மேக்கரை சூடான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து தண்ணீரைப் பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* ஒரு வானலில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் சோம், வெந்தயம், பட்டை, பிரிஞ்சி இலை போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

* பின்னர் மீல்மேக்கரை சேர்த்து, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் உள்ளிட்டவற்றை கலந்து நன்கு மூடி கொதிக்க வைக்க வேண்டும்.

* இந்த கலவை கொதித்தவுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுது போட்டு கொதி வந்ததும் இறக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான மீல் மேக்கர் குழம்பு தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

meel mekkar kuzhambu receipe


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->