அமெரிக்காவில் ஹிந்து கோவிலில் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல்: குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த நடவடிக்கை: இந்திய தூதரகம் வலியுறுத்தல்..!
Indian Embassy urges US to bring perpetrators of Hindu temple shooting to justice
கடந்த வாரம் வங்கதேசத்தில் டாக்காவில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் சேதப்படுத்தப்பட்டு வெளியான வீடியோ ஹிந்துக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது போன்ற மற்றுமொரு சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் உதா மாகாணத்தில் உள்ள ஸ்பானிஷ் போர்க் என்ற பகுதியில் இஸ்கான் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஹிந்து கோவிலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உள்ளூர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்த இஸ்கான் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்நிலையில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, கோவில் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவிலின் கட்டடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டடங்கள் மீது 20 முதல் 30 துப்பாக்கி குண்டுகள் வரை பாய்ந்துள்ளன. இது குறித்து, புகைப்படங்களையும் கோவில் நிர்வாகம் இணையதளத்தில் பகிர்ந்து தாக்குதலை உறுதிப்படுத்திள்ளது. இந்த ஹிந்து கோவிலில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து, தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'இஸ்கான் ஸ்ரீராதா கிருஷ்ணா கோவிலில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அனைத்து பக்தர்களுக்கும் சமூகத்திற்கும் தூதரகம் முழு ஆதரவை வழங்குவதோடு, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உள்ளூர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.' என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Indian Embassy urges US to bring perpetrators of Hindu temple shooting to justice