பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு; வருங்காலத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கக்கூடாது என்பதற்கு அடித்தளமாக அமையட்டும்: தமிழிசை..!
Tamilisai believes that the Pollachi sex case verdict should serve as a foundation to ensure that crimes against women do not occur in the future
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 09 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு தொடர்பில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
மலர் போன்று இருந்த பெண்கள்.. கசக்கி வீசப்பட்ட பொள்ளாச்சி வழக்கில் இன்று தீர்ப்பு வந்திருக்கிறது... குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது இந்த வழக்கின் தீர்ப்பு வருங்காலத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கக்கூடாது என்பதற்கு அடித்தளமாக அமையட்டும்...
தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கப்படும் கண்கள் பொசுக்கப்படட்டும் பெண்களைத் தவறாக தீண்ட நினைக்கும் கைகள் தீய்ந்து போகட்டும்... பெண்களைத் தவறாக பார்க்கும் எண்ணம் சிதைந்து போகட்டும்.. இந்த தீர்ப்பு பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தீர்த்து வைக்கட்டும்... என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Tamilisai believes that the Pollachi sex case verdict should serve as a foundation to ensure that crimes against women do not occur in the future