சுவாசிகா நடிப்பில் ‘ஷம்பாலா’! - பிரபாஸ் வெளியிட்ட ‘ஷம்பாலா’ டிரெய்லர் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது...!
Shambala starring Swasika trailer Shambala released by Prabhas surprised fans
நடிகர் ஆதி சாய்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஷம்பாலா: எ மிஸ்டிகல் வேர்ல்ட்’ திரைப்படம், மாயமும் மர்மமும் கலந்த ஒரு சூப்பர்நேச்சுரல் ஹாரர் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. திறமையான இயக்குநர் உகாந்தர் முனி இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் தற்போது ரசிகர்களிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்தப் படத்தில் அர்ச்சனா ஐயர், லப்பர் பந்து புகழ் சுவாசிகா விஜய், மதுநந்தன், ரவிவர்மா, மீசாலா லக்சுமன், ஷிஜு மேனன், இந்திராணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மஹிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு ஆகியோர் ஷைனிங் பிக்சர்ஸ் பேனரில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இசையை ஸ்ரீசரண் பகாலா அமைத்துள்ளார், மேலும் படத்தின் பின்னணிச் சுருதி, அதன் மாய உலகத்தை இன்னும் ஆழமாக உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.திரைப்படத்தின் முக்கிய அம்சம் ,அதன் மிஸ்டிகல் கான்செப்ட் மற்றும் விசுவல் எஃபெக்ட்ஸ்.
எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் வகையில், பான்-இந்தியா ஸ்டார் பிரபாஸ், இந்தப் படத்தின் டிரெய்லரை வெளியிட்டு, படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மர்மமும் அதிர்வுகளும் கலந்த ‘ஷம்பாலா’, வரும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் திருவிழா நாளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
English Summary
Shambala starring Swasika trailer Shambala released by Prabhas surprised fans