தென் ஆபிரிக்காவை சாய்த்த ஹர்மன்பிரீத் கவுர் அண்ட் கோ: மகளிர் உலகக்கோப்பையை முதல் முறையாக தட்டி தூக்கிய இந்தியா..!
India defeated South Africa to lift the Womens World Cup for the first time
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, லாரா வால்வார்ட் தலைமையிலான மிக வலிமையான தென் ஆப்ரிக்கா அணியை எதிர்த்து விளையாடியது. நவி மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்கியது.
போட்டியில், டாஸை வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிரிதி மந்தனாவும், ஷபாலி வர்மாவும் இறங்கினர். ஸ்மிரிதி மந்தனா 45 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷபாலி வர்மா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 87 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, ஜெமிமா ரோட்ரிக்ஸ் (24), ஹர்மன்ப்ரீத் கவுர் (20), அமன்ஜோத் கவுர் (12) ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். மற்றொருபுறம் கடைசி வரை விளையாடிய தீப்தி சர்மா 58 ரன் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 07 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது.
தென் ஆப்ரிக்கா அணி சார்பில் காகா 03 விக்கெட்டுகளும், மலபா, டி கிளெர்க், டிரையன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
298 ரன்னை இலக்காகக் கொண்டு விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் ப்ரிட்ஸ் 23 ரன்னிலும், போஸ்ச் ரன் எதுவுமின்றியும், ஆட்டமிழந்தனர். மறுமுனையில் அதிரடியாக ஆடிய கேப்டன் வால்வார்ட் சத்தம் அடித்தார்.

ஷபாலி வர்மா பந்து வீச்சில் லுஸை 25 ரன்னிலும், காப் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில், தென் ஆப்ரிக்கா அணி 45.3 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணி சார்பில் தீப்தி ஷர்மா 04 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ஷபாலி வர்மா 02 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவரை ஐ.சி.சி., தொடரில் மூன்றாவது முறை பைனலுக்கு முன்னேறிய இந்திய பெண்கள் அணி, இன்று முதல் கோப்பை வென்று சாதித்துள்ளமை இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.
English Summary
India defeated South Africa to lift the Womens World Cup for the first time