ராஜஸ்தானில் ரூ.21 கோடி மதிப்புள்ள எருமை உயிரிழப்பு; விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம்..!
Buffalo worth Rs 21 crore dies in Rajasthan
இந்தியாவின் மிகப்பெரிய கால்நடை திருவிழாவாக ராஜஸ்தானில் ஆண்டுதோறும் பிரபல புஷ்கர் கால்நடை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மாடுகள், குதிரைகள், ஒட்டகங்கள், எருமைகள் போன்ற கால்நடைகள் விற்பனைக்காகவும், பார்வைக்காகவும் காட்சிப்படுத்தப்படுகின்றன. இதில் ராஜஸ்தானைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான 'அன்மோல்' என்ற எருமை மாட்டின் விலை, 21 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்து.
இந்த எருமைக்கு நாள்தோறும் பால், நெய், பருப்பு வகைகள், முந்திரி உள்ளிட்ட உலர் பழங்கள் உணவாக வழங்கப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்திருந்தார். ஏராளமான பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்து வந்த இந்த எருமை மாடு திடீரென உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்துள்ளது.
லாபத்தின் பெயரில் விலங்குகளை கொடுமைப்படுத்துவதற்கான எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எருமைக்கு உடல் உபாதைகள் இருந்த நிலையிலும், அதைப் பருமனாகவும் கொழுப்பாகவும் காட்ட அவர்கள் பல மருந்துகளை செலுத்தி உள்ளனர் என விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Buffalo worth Rs 21 crore dies in Rajasthan