தக் லைப் படத்தின் ஒடிடியை வாங்கிய பிரபல நிறுவனம்..!!
thug life ott update
தமிழ் சினிமாவில் சுமார் 36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படம் வருகிற ஜூன் மாதம் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கிடையே 'தக் லைப்' படத்தின் பாடல் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமல்லாமல், ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைக்கான வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. அதன்படி, தக் லைப் படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும் டிஜிட்டல் (ஓ.டி.டி) உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.