குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - வாக்குறுதியை வாரி இறைக்கும் தேஜஸ்வி யாதவ்.!!
thejasvi yadav promise govt job to one person in all families
பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இருதரப்பிலும், மாறி மாறி வாக்குறித்து அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில், தேர்தல் வாக்குறுதி ஒன்றரை இன்று அறிவித்துள்ளார்.
அதாவது, அரசு வேலையில் உள்ளவர்களின் குடும்பங்களை தவிர்த்து மற்ற அனைத்து குடும்பங்களிலும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதற்கான சட்டம் ராஷ்டிரிய ஜனதா தள அரசு அமைந்த 20 நாட்களுக்குள் இயற்றப்பட்டு 20 மாதங்களுக்குள் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
English Summary
thejasvi yadav promise govt job to one person in all families