கதறவிட்ட கரூர் சம்பவம் - மதியழகனை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிறப்பு குழு மனு.!!
sit team petition for take custody into madhiyazhagan
கரூரில் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது.
அதன் படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை விதிக்க கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று த.வெ.க தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி த.வெ.க.வினரின் மனுவை நாளை (10-ந்தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள மதியழகனை 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு மனுத் தாக்கல் செய்துள்ளது.
English Summary
sit team petition for take custody into madhiyazhagan