தின்பண்டத்தை பிரிப்பதில் தகராறு - சிறுவனை கத்தியால் குத்திய சக நண்பன்.!!
boy murder in karnataga for snacks
கர்நாடகா மாநிலம் ஹப்பள்ளி மாவட்டத்தில் நேற்று மாலை இரண்டு சிறுவர்கள் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒருவருக்கும் இடையே ரூ.5 மதிப்புள்ள நொறுக்கு தீனியை பகிர்ந்து கொள்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், சாய் என்ற சிறுவன் கத்தியால் மற்றொரு சிறுவனை தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
boy murder in karnataga for snacks