ஜி.எஸ்.டி குறைப்பு –ஜி.எஸ்.டி. கவுன்சில் இன்று கூடுகிறது!- எந்தெந்த பொருட்களுக்கு விலை குறையும்?
GST reduction GST Council meets today Which items will have their prices reduced
தற்போது நடைமுறையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக உள்ளது.
சுதந்திர தின உரையில், டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றியபோது, பிரதமர் நரேந்திர மோடி தீபாவளிக்குள் ஜி.எஸ்.டி. கணிசமாக குறைக்கப்படும் என்று அறிவித்தார்.
2 அடுக்குகளாக குறைக்கும் திட்டம்
அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு ஜி.எஸ்.டி-யை 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளாக குறைக்க பரிசீலித்து வருகிறது.
12% அடுக்கில் உள்ள 99% பொருட்கள் → 5% வரி அடுக்குக்கு மாற்றப்படுகின்றன.
28% அடுக்கில் உள்ள 90% பொருட்கள் → 18% வரி அடுக்குக்கு மாற்றப்படுகின்றன.
இதன் மூலம், அன்றாடம் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்களின் விலை குறையும் என்று நம்பப்படுகிறது.
கடந்த மாதம் கூடிய மந்திரிகள் குழு, இந்த வரி குறைப்புக்கு ஒப்புதல் தெரிவித்தது. தனது பரிந்துரைகளை ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அனுப்பிவைத்தது.
இந்த நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அனைத்து மாநிலங்களின் நிதி மந்திரிகளும் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த கூட்டத்தில், ஜி.எஸ்.டி-யை 2 அடுக்குகளாக குறைப்பது குறித்தும், வரிகுறைப்பு நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய ஆலோசனைகள் நடைபெறுகின்றன.
ரூ.10 லட்சம் மதிப்பிலான மின்சார வாகனங்களுக்கு 18% ஜி.எஸ்.டி. விதிக்க வேண்டும் என மந்திரிகள் குழு பரிந்துரைத்துள்ளது.
ஆனால், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க, மத்திய அரசு 5% ஜி.எஸ்.டி. தான் விதிக்க வேண்டும் என வலியுறுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வரி குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட, மத்திய அரசு இழப்பீடு தர வேண்டும் என மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுவும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
12% → 5%: நெய், 20 லிட்டர் குடிநீர், தின்பண்டங்கள், சிலவகை காலணிகள், ஆடைகள், மருந்துகள், மருத்துவ கருவிகள், பென்சில், சைக்கிள், குடை, ஹேர்பின்.
28% → 18%: சில வகை டெலிவிஷன், வாஷிங் மெஷின், பிரிஜ், குறைந்த விலை கார்கள்.
எஸ்யூவி & சொகுசு கார்கள்: 40% சிறப்பு ஜி.எஸ்.டி.
புகையிலை, பான் மசாலா, சிகரெட்: 40% ஜி.எஸ்.டி.
இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால், அன்றாட நுகர்வோர் பொருட்களின் விலை குறைந்து பொதுமக்களுக்கு நிவாரணமாக இருக்கும். அதேசமயம், சொகுசுப் பொருட்கள் மற்றும் பழக்கப்பொருட்களின் விலை உயரும்.
English Summary
GST reduction GST Council meets today Which items will have their prices reduced