மழையில் நனையாமல் ஒதுங்கிய தொண்டர்களை திட்டிய சீமான் – “மழைக்கு மரியாதை கற்றுக்கொள்ளுங்க!” கடலம்மா மாநாட்டில் சீமான் பேச்சு! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில், நாம் தமிழர் கட்சி சார்பில் கடல் பாதுகாப்பை முன்னிட்டு “கடலம்மா மாநாடு” நடைபெற்றது. கடல்சார் வாழ்வாதாரத்தையும், சூழலையும் காக்கும் நோக்கில் நடக்கின்ற இந்த மாநாட்டில் திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

சீமான் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மழை கொட்டித் தீர்ந்தது. இதையடுத்து சில தொண்டர்கள் மழையில் நனையாமல் இருக்க ஓரமாக ஒதுங்கினர். இன்னும் சிலர் தங்கள் இருக்கைகளை எடுத்து தலையில் மேல் பிடித்து மறைந்தனர்.

இந்த காட்சியை நேரடியாகக் கவனித்த சீமான், மழையில் நனைந்தபடியே உரையைத் தடுத்து வைத்து கடும் கண்டனம் தெரிவித்தார்:

“மழைதான்யா… கடலம்மாவைப் பற்றி பேசும் பொழுதே மழை வரலையென்றால் அது மரியாதையில்லாதது! நீ நனைந்தால் முளைப்பதற்கு விதையோ பூண்டோ இல்லை… மழைக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ளுங்கடா தம்பிகளா! சேரினை இறக்குங்கடா!”

அதனைத் தொடர்ந்து,“சாதாரண மழைதான்யா… குண்டு மழை பெய்யும்போது கூட ஓடாமல் நின்ற வீரர்கள் நம்ம! இவ்வளவு குளிர் மழைக்கா ஓடுறீங்க?” என்று சீமான் மேலும் கூறினார்.

மழை நின்றதும்,“நம்மை ஆசீர்வதிச்சிட்டு போயிட்டுச்சு,” என்று கூறி தனது உரையைத் தொடர்ந்து நிகழ்த்தினார்.

சீமான் மழையில் நனைந்தபடி உரையாற்றுவது புதியது அல்ல. ஆனால் இந்த முறை, அவருடைய தொண்டர்கள் மழையைத் தவிர்க்க முயன்றதைப் பார்த்து திடீரென கண்டித்தது பலரின் கவனத்தையும் சமூக வலைதளத்தில் பெரிய விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman scolds volunteers who stayed away from getting wet in the rain Learn to respect the rain Seeman speech at the Kadalamma conference


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->