காஞ்சிபுரத்தில் நாளை விஜயின் ‘சிறப்பு மக்கள் சந்திப்பு’: ஓவர் ஸ்பீடு எடுத்த தவெக! – காரணமும், பிளானும் என்ன? - Seithipunal
Seithipunal


கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, தன்னுடைய பொது நிகழ்வுகளை தற்காலிகமாக நிறுத்திய தவெக தலைவர் விஜய், மீண்டும் மக்கள் சந்திப்பு நிகழ்வுகளைத் தொடங்க முடிவு செய்துள்ளார். அதன் முதல் கட்டமாக, நாளைய ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சிறப்பு மக்கள் சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி கோரி காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகம் மற்றும் சுங்குவரச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் தவெக நிர்வாகிகள் நேற்று மனு அளித்துள்ளனர். இதில், சுமார் 2,000 பேர் மட்டுமே பங்கேற்கும் உள் அரங்கு நிகழ்ச்சி என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு நடத்தப்படுவதற்கான காரணங்கள் குறித்து தவெக தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன:

காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளில் உள்ள தவெக நிர்வாகிகளின் குடும்பத்தினரை விஜய் நேரடியாக சந்திக்க உள்ளார்.தொண்டர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு பேசப்படும்.

மக்கள் பாதுகாப்புப் படை பயிற்சி நடைபெறும் அதே வளாகத்தில், பயிற்சி பெறும் தொண்டர்களுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.அடையாள அட்டை வழங்கப்பட்ட பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோரும் விஜயை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு பெறுகிறார்கள்.

மேலும், கடந்த கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு விவகாரம் மிகவும் முக்கியமாய் பார்க்கப்படுவதால், இந்த நிகழ்வு ஓரளவுக்கு மூடப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட உள் அரங்கில் நடத்தப்படுகிறது.

கல்லூரி வளாகத்தில் 5 நாட்களாக மக்கள் பாதுகாப்புப் படைக்கு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் பயிற்சி அளித்து வருகின்றனர். தடுப்புவேலி, அமர்வு அமைப்பு, நுழைவு கட்டுப்பாடு போன்ற அனைத்து ஏற்பாடுகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. காலை 10 மணிக்குத் தொடங்கும் நிகழ்வில் 1,500–2,000 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் நீதிமன்ற பரிசீலனையில் உள்ள நிலையில், விஜயின் இந்த உள் அரங்கு மக்கள் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay special public meeting in Kanchipuram tomorrow Tvk took over speed What is the reason and the plan


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?


செய்திகள்



Seithipunal
--> -->