ஜிஎஸ்டி 2.0க்கு பிறகு பல்வேறு மாற்றங்களுடன் விற்பனை!ஹூண்டாய் i20-க்கு ரூ.85,000 வரை தள்ளுபடி – கொட்டாட்டத்தில் கார் பிரியர்கள்!
Sales with various changes after GST 2 Up to Rs 85000 discount on Hyundai i20 Car enthusiasts in Kottayam
ஹூண்டாய் மோட்டார் இந்தியா தனது பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான i20-க்கு நவம்பர் மாதத்தில் பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது. கடந்த மாதம் ரூ.45,000 தள்ளுபடி வழங்கப்பட்ட இந்த மாடலுக்கு, இந்த மாதம் ரூ.40,000 அதிகரித்து மொத்தம் ரூ.85,000 வரை சலுகை வழங்கப்படுகிறது. i20 N லைன் மாடலுக்கும் ரூ.70,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது. ஜிஎஸ்டி 2.0 அமலுக்கு வந்ததையடுத்து, இந்த காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7,12,385 ஆக குறைந்தது. மாருதி பலேனோ, டொயோட்டா கிளான்ஸா மற்றும் டாடா அல்ட்ராஸ் போன்ற ஹேட்ச்பேக்குகளுடன் இது கடும் போட்டியில் உள்ளது.
இன்ஜின் & மைலேஜ்:
ஹூண்டாய் i20, 1.2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினில் கிடைக்கிறது. இந்த இன்ஜின் 83 bhp சக்தியும், 115 Nm டார்க்கும் வழங்குகிறது. 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ISG (Idle Stop & Go) தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. முன்பு கிடைத்த 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் வேரியன்ட்டை நிறுவனம் நிறுத்தியுள்ளது.
அம்சங்கள்:
புதிய i20 மாடலில் ஆம்பியன்ட் லைட்டிங், டோர் ஆர்ம்ரெஸ்ட், லெதரெட் பேடிங் போன்ற பிரீமியம் அம்சங்கள் தொடர்கின்றன.
• 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட்
• டிஜிட்டல் கிளஸ்டர்
• 7-ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டம்
• ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே
• வயர்லெஸ் சார்ஜிங்
• சிங்கிள் பேன் சன்ரூஃப்
• ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல்
அமேசான் கிரே உட்பட 6 மோனோடோன் மற்றும் 2 டூயல்-டோன் நிறங்களில் கார் கிடைக்கிறது.
பாதுகாப்பு அம்சங்கள்:
மொத்தம் 26 பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
• 6 ஏர்பேக்குகள்
• ESC (Electronic Stability Control)
• HAC (Hill Assist Control)
• VSM (Vehicle Stability Management)
• 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள்
• அனைத்து சீட்டுகளுக்கும் சீட் பெல்ட் ரிமைண்டர்
• EBD + ABS
• டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்
• ரிவர்ஸ் சென்சார்
• ஆட்டோ ஹெட்லேம்ப்
மேலும், 60+ Connected Car அம்சங்கள், 127 Voice Commands, 52 Hinglish Commands, OTA Updates போன்ற வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
தள்ளுபடிகள் குறித்து முக்கிய குறிப்பு:
இந்த தள்ளுபடிகள் மாநிலம், நகரம், டீலர்ஷிப், கையிருப்பு, நிறம், வேரியன்ட் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடக்கூடும். எனவே, காரை வாங்கும் முன் உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொண்டு இறுதி சலுகை விவரங்களை உறுதிப்படுத்துவது அவசியம்.
ஹூண்டாய் i20 மீது இத்தகைய பெரிய தள்ளுபடி வழங்கப்படுவது, வருட இறுதி விற்பனையில் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக்கின் தேவை மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
English Summary
Sales with various changes after GST 2 Up to Rs 85000 discount on Hyundai i20 Car enthusiasts in Kottayam