வளர்ந்தபிறகு அறிமுக படுத்திய வசந்தபாலனை கண்டுக்கலையா ஜிவி பிரகாஷ்?.. இது என்ன புது பஞ்சாயத்து.. - Seithipunal
Seithipunal


இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பிஸியாக செயல்பட்டு வரும் ஜிவி பிரகாஷ் தற்போது பராசக்தி படத்தின் இசை பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார். முதல் சிங்கிள் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதே நேரத்தில், ஜிவி பிரகாஷை அறிமுகப்படுத்திய இயக்குநர் வசந்தபாலன் அவருடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தை குறித்து முன்பு பேசிய வீடியோ ஒன்று திடீரென சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஜிவி பிரகாஷ், ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரியின் மகன். 2006-ல் வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், முதல்படத்திலேயே பாடல்கள், பி.ஜி.எம் என விமர்சகர்களையும், ரசிகர்களையும் கவர்ந்தார். தொடர்ந்து குசேலன், கிரீடம், பொல்லாதவன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் இசையமைத்து யுவன் ஷங்கர் ராஜாவுக்கு கம்பீரமான போட்டியாக உருவெடுத்தார்.

இந்நிலையில் நடிப்பில் ஈடுபட்ட காரணத்தால், ஒரு கட்டத்தில் ஜிவி இசை உலகில் ஓரளவு தளர்ந்தார். ஆனால் ரசிகர்கள் வலியுறுத்தியதால் மீண்டும் இசையமைப்பில் கவனம் செலுத்தினார். அதன் பலனாக சூரரைப் போற்று மற்றும் வாத்தி படங்களுக்கு தேசிய விருதையும் வென்று தற்போது மிக பிஸியான இசையமைப்பாளராக மாறியுள்ளார்.

இதே சமயம், ஜிவிக்கு அறிமுக வாய்ப்பு கொடுத்த வசந்தபாலனுடன் அவர் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் பற்றி முன்பு கிளம்பிய வதந்திகள் மீண்டும் மீண்டும் பேசப்பட்டன. அது குறித்து வசந்தபாலன் கூறிய பழைய பேட்டி தற்போது வைரலாகியுள்ளது.

அந்த பேட்டியில் வசந்தபாலன் கூறியதாவது:“வெயில் வெற்றி பிறகு ஜிவிக்கு படங்கள் குவிந்தன. குசேலன், ஆயிரத்தில் ஒருவன், கிரீடம்… அவரது ஸ்டூடியோவுக்கு சென்றால் பி.வாசு, செல்வராகவன் போன்ற பெரிய இயக்குநர்கள் கூட பாடல்களுக்காக காத்திருந்தார்கள்.ஒரு கட்டத்தில் என்னால் ஜிவியை சந்திக்கவே முடியவில்லை, பாடல்களையும் வாங்க முடியவில்லை. இப்படியாக ‘அங்காடித் தெரு’ படம் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் தான் அவரிடம் சுமூகமாக பேசி விலகினேன்.”

பின்னர் மனஸ்தாபம் நீங்கி, ஜிவி பிரகாஷ் வசந்தபாலன் இயக்கிய ஜெயில் படத்தில் நாயகனாக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது அந்த பேட்டி வீடியோ மீண்டும் டிரெண்டாகி, ரசிகர்கள் இருவரின் தொழில்முறை நட்பையும் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

GV Prakash find Vasanthapalan who was introduced after he grew up What new panchayat is this


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->