என்ன சார் பெரிய அலைபாயுதே! ரஜினி லதாவை எப்படி ப்ரோபோஸ் செய்தார் தெரியுமா? வைரல் தகவல்!
What a big wave Do you know how Rajini proposed to Latha Viral information
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வயது 74 ஆனாலும், இன்று வரை கோலிவுட்டில் மிகப் பிஸியாக செயல்பட்டு வருகிறார். கூலி படத்தை முடித்து தற்போது ஜெயிலர் 2 வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அதன் பிறகு, நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
முதலில் இந்தப் படத்தை இயக்க சுந்தர்.சி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, காரணம் தெரியாமல் சுந்தர்.சி திட்டத்திலிருந்து விலகினார். இதனால் இப்போது அந்தப் படத்துக்கு புதிய இயக்குநரை தேடும் பணி வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், ரஜினிகாந்தின்PERSONAL LIFE பற்றி ஒரு பழைய, ஆனால் பெரும்பாலோர் அறியாத தகவல் மீண்டும் பேசப்படுகிறது — அவர் தனது மனைவி லதாவிடம் எப்படி காதல் தெரிவித்தார் என்பதுதான் அது.
ஒரு படத்தின் படப்பிடிப்பில் ரஜினியை நேர்காணல் செய்ய லதா வந்தபோது இருவருக்கும் முதல் அறிமுகம் ஏற்பட்டது. பார்த்த சில நிமிடங்களிலேயே லதாவை பார்த்து ரஜினி மனசில் காதல் மலர்ந்துவிட்டது. ஆனால் அதை எப்படி சொல்லுவது என்று தெரியாமல் இருந்த காலத்தில், லதா தான் முன்பாக ஒரு கேள்வி கேட்டு வாய்ப்பை உருவாக்கினார்.
“குடும்ப பாங்கான பெண் கிடைத்தால் திருமணம் செய்வேன் என்று சொன்னீர்கள்… குடும்ப பாங்கு என்றால் என்ன?” என்று லதா கேட்டார்.
இதையே ரஜினி உடனே சந்தர்ப்பம் என்று புரிந்து கொண்டு,“அழகாகவும், கம்பீரமாகவும், மென்மையாகவும், புத்திக்கூர்மையாகவும் இருக்க வேண்டும்… அதாவது உன்னை மாதிரி பெண் கிடைத்தால் நான் உடனே திருமணம் செய்துகொள்வேன்,”என்று நேரடியாக சொன்னாராம்.அங்கிருந்த லதாவும், மற்றவர்களும் அந்த பதிலை கேட்டு சில நொடிகள் அதிர்ச்சியாக நின்றுவிட்டார்களாம்!
லதா நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் உறவுக்காரர் என்பதால், ரஜினி நேரடியாக அவரிடம் விஷயத்தைப் பகிர்ந்தார். பல நாட்கள் ஆலோசனை, கலந்துரையாடலுக்குப் பிறகு லதாவின் வீட்டில் சம்மதம் கிடைத்தது. பின்னர் இருவரும் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டனர்.
இப்போது, 74 வயதிலும் ஓயாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த், தனது அடுத்த படத்துக்காக புதிய இயக்குநர் யார் என்பதற்கான அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
English Summary
What a big wave Do you know how Rajini proposed to Latha Viral information