05 வது முறையாக இறுதிப்போட்டிக்கு சென்ற பெங்களூரு அணி; 92 ரன்களில் படுதோல்வியடைந்த குஜராத் அணி..! - Seithipunal
Seithipunal


 நடப்பு 19-வது ஐபிஎல் சீசனின் முதல் ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இமாச்சல் பிரதேசம் தரம்சாலாவில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸை இழந்த ஆர்சிபி அணி, முதலில் பேட்டிங் செய்தது. 

அணி சார்பில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் விராட் கோலி இணைந்து களமிறங்கினர்.  இதில் 07 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து வெங்கடேஷ் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

அதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த கோலி, தேவ்தத் படிக்கல் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது ஒரே ஓவரில் அவர்கள் இருவரது விக்கெட்டையும் குஜராத் வீரர் ஜேசன் ஹோல்டர் கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் பட்டிதார் மற்றும் க்ருணல் பாண்டியா இணைந்து 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் க்ருணல் பாண்டியா, 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிம் டேவிட் 04 ரன்கள் எடுத்தார்.

 இறுதிவரை களத்தில் இருந்த கேப்டன் பட்டிதார், 33 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். ஜிதேஷ் 15 ரன்கள் எடுத்திருந்தார். அதன்படி பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது.

குஜராத் அணி சார்பில், றபாடா, ஜேசன் ஹோல்டர் தலா 02 விக்கெட்டினையும், பிரசித் கிருஷ்ணா 01 விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

அடுத்து, 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி, தொடக்கம் முதலே அதிர்ச்சி கொடுத்தது. அதன்படி, முதலில் கமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 14 பந்துகளில் ஆட்டமிழந்தார். அணியின் கேப்டன் கில் 02 ரன்களிலும், பட்லர் 29 ரன்களிலும், நிஷாந்த் சிந்து 05 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 08 ரன்களிலும், ஹோல்டர் 0 விலும், ரசித்கான் 08 ரன்களிலும், றபாடா 09 ரன்களிலும், ராகுல் தெவட்டியா 68 ரன்களிலும், சிராஜ் 05 ரன்களிலும், பிரசித் கிருஷ்ணா 06 ரன்கள் என ஆட்டமிழக்க, குஜராத் சகல விக்கெட்டுகளை இழந்தது. 

இதன் மூலம், பெங்களூரு அணி, ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. அணியின் சார்பில், டப்பி 03 விக்கெட்டுகளையும், புவனேஷ்குமார், ராசிக் ஸலாம், குர்னால் பாண்டியா தலா 02 விக்கெட்டுகளையும், ஹெசல்வூட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

இதன் மூலம் பெங்களூரு அணி, 92 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி அபார வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இது அந்த அணியின் 05-வது இறுதிப்போட்டியாகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bengaluru Team Reaches Final for the 5th Time


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->