கர்நாடகாவில் அடுத்த முதல்வராகும் டி.கே.சிவக்குமார்..? துணை முதல்வராகும் சித்தராமையா மகன்..?
DK Shivakumar to become the next Chief Minister of Karnataka
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா எதிர்வரும் வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கர்நாடகாவின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கக் கூடும் என்று பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சித்தராமையா தேசிய அளவிலான பொறுப்புகளை ஏற்கு வருமாறு காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சித்தராமையாவின் மகன் கர்நாடகாவின் புதிய துணை முதலமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. 1989-க்குப் பிறகு காங்கிரஸ் கட்சி 135 இடங்களுடன் பெரும்பான்மை வெற்றி பெற்றது. கர்நாடகவின் வெற்றி கொடுத்த உத்வேகத்தில், அண்டை மாநிலமான தெலுங்கானாவையும்காங்கிரஸ் கைப்பற்றியது. அதேப்போன்று 2026 தேர்தலில் கேரளாவிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றிப்பெற்றுள்ளது.
அதேப்போன்று, தமிழ்நாட்டில் தவெக அமைச்சரிவையிலும் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. ஆந்திர மாநிலத்தைத் தவிர்த்து தென்மாநிலங்கள் முழுவதும் செல்வாக்கு செலுத்தி வரும் நிலையில், கர்நாடகவில் மிகப்பெரிய அரசியல் நகர்வை அக்கட்சி மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
DK Shivakumar to become the next Chief Minister of Karnataka