'அமெரிக்காவின் ராணுவ தளங்களுக்கு இனி எவ்வித பாதுகாப்பும் இல்லை'; கடும் எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்..!
Iran has issued a warning that US military bases are no longer safe
அமெரிக்கா, ஈரான் மீது நடத்திய திடீர் வான்வழித் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.
அதாவது, தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் சர்வதேச கடல் பகுதியில் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற ஈரான் கப்பல்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டுப் படைகளைப் பாதுகாக்கும் பொருட்டே இந்த தற்காப்புத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளது.
ஆனால், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
''இந்தப் போரின் மூலம் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களுக்கு இனி எவ்வித பாதுகாப்பும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. காலத்தின் சக்கரம் பின்னோக்கிச் சுழலாது. இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளும் நிலங்களும் இனி அமெரிக்கத் தளங்களைக் காக்கும் கேடயமாக செயல்படாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Iran has issued a warning that US military bases are no longer safe