திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 162 அரசு வழக்கறிஞர்களின் ராஜினாமா தமிழக அரசால் ஏற்பு..! - Seithipunal
Seithipunal


சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 162 அரசு வழக்கறிஞர்களின் ராஜினாமாவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்றதும், அரசு வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்த நிலையில், புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கும் வரை பணியில் தொடருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்நிலையில், திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களின் ராஜினாமாவை தவெக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு பிளீடர் எட்வின் பிராபகர், 24 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், 36 கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், 54 அரசு வழக்கறிஞர்களின் ராஜினாமாவையும், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசு பிளீடர் பி.திலக்குமார், 09 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், 16 கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், 21 அரசு வழக்கறிஞர்களின் ராஜினாமாவையும் ஏற்று, பொதுத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Resignations of 162 Government Advocates Appointed During DMK Rule Accepted by Tamil Nadu Government


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->