அதிமுக எம்எல்ஏக்கள் விலகி தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியல் இல்லை; இது தவெகவின் நம்பகத்தன்மை பாதிக்க செய்யும்'; திருமாவளவன் கருத்து..! - Seithipunal
Seithipunal


''யார் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தாலும், அவர்களை கட்சியில் இணைத்துக் கொள்வது என்பது தவெகவின் நம்பகத்தன்மை பாதிக்க செய்யும்'' என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறும்போது தெரிவித்துள்ளதாவது;

குன்னத்தில் நடைபெற்ற சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறதாகவும், வேதனையளிக்கிறதாகவும், சமூக ஊடகங்களில் வரும் அவதூறுகளுக்கு எதிர்வினை ஆற்ற வேண்டாம் என விசிகவினரை கேட்டுக் கொள்கிறேன் என்றும், இதுபோன்ற ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை கேள்விபட்டு, அதனை தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாவட்ட முன்னணி பொறுப்பாளர்கள், ஆர்ப்பாட்டம் இல்லை என்பதை அறிந்து தவிர்த்து விட்டார்கள் என்றும், ஆனால், தகவல் தெரியாதவர்கள் அங்கே கூடியிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், திமுகவை சார்ந்தவர்களும் அங்கே கூடியுள்ளார்கள் என்றும், இதனால் அங்கே விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். இனி அவ்வாறு நடக்க இயக்க தோழர்கள் இடம் கொடுக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுக எம்எல்ஏக்கள் விலகி தவெகவில் இணைவதை ஆரோக்கியமான அரசியலாக கருதவில்லை என்றும், குடியரசுத் தலைவர் ஆட்சி வரக் கூடாது என எங்கள் ஆதரவை வழங்கினோம் என்று கூறியுள்ளதோடு, தவெகவின் அழைப்பை ஏற்று அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளோம். எந்த சூழலிலும் உங்கள் ஆட்சி கவிழ இடம் கொடுக்க மாட்டோம். அந்த நம்பிக்கையோடு நீங்கள் ஆட்சியை திறம்பட செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆகையால், இதுபோன்ற விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காத வகையில் தவெக தலைமை செயல்பட வேண்டும் என்பது எங்கள் விருப்பம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதிமுக இதுபோன்ற நெருக்கடியை சந்திக்கும் என தேர்தலுக்கு முன்பே சொல்லியிருந்தேன். பாஜக கூட்டணியில் இருந்ததால் தான் அதிமுக ஆதரவை பெறுவதில் தவெகவுக்கு நெருடல் இருந்ததாக அக்கட்சி தலைவர்கள் கூறியிருந்தனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பாஜக கூட்டணி இல்லாமல் அதிமுக இருந்திருந்தால், தவெக அவர்களின் ஆதரவை நாடியிருக்கும என்றும், எனவேதான் அதிமுக இந்த நெருக்கடி நிலையை சந்திக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், யார் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தாலும், அவர்களை கட்சியில் இணைத்துக்கொள்வது என்பது தவெகவின் நம்பகத்தன்மை பாதிக்க செய்யும். எனவே தவெக தலைமை இதற்கு ஊக்கமளிக்க கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், தமிழக அரசியலில் தலித்களுக்கு அதிகம் இடம் கொடுத்திருப்பது இதுவே முதன் முறை. அந்த சமூகத்துக்கு அங்கீகாரம் அளித்திருப்பது மகிழ்ச்சி எனவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirumavalavan opines that inducting AIADMK MLAs into the party would undermine the credibility of the TVK


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->